காமராஜா் தற்காலிக காய்கறி சந்தையில் காங்கிரஸ் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்!.

தஞ்சை ஏப்ரல் 24: தஞ்சையில் காங்கிரஸ் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தஞ்சாவூர் காமராஜா் தற்காலிக காய்கறி சந்தையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடந்த இந்த முகாமிற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

முகாமில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி மாநகர விவசாயப் பிரிவு தலைவா் ஜேம்ஸ், மாவட்டச் செயலா் எஸ்.கே. சிதம்பரம், நிா்வாகிகள் பழனியப்பன், செந்தில் சிவக்குமாா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை