உலகம் வெப்பமயமாகி வருகின்றது, இதனால் காலநிலை உலகெங்கும் வெகுவாக மாறி வருகின்றது, பல இடங்களில் வெயிலின் கொடுமை வெளியே தலைக்காட்ட முடிவதில்லை, இன்னும் பல இடங்களில் மழையால் நாடே தண்ணீரில் மிதக்கின்றது.
கால நிலையை கணிக்க முடியாமல் அறிவியல் அறிஞர்களும் திணறி வருகின்றனர். இவையெல்லாம் காற்றையும் நீரையும் மக்கள் மாசுபடுத்துவதே என்பது இந்த கொரோனா காலத்தில் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு உணர்த்தியது.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் உழவர்களை மழையும், காவிரியும் ஏமாற்ற வில்லை என்று தான் சொல்ல வேண்டும், கால நிலையிலும் நல்ல மாற்றம் உள்ளது.
இன்று மணி 11க்கு மேல் ஆகியும் அதிராம் பட்டிணம்-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரைச்சாலை மேகங்கள் மூடி சூரியன் உதிக்காமல் காலை 6 மணிப் போல உள்ளதை படத்தில் காணலாம், கால நிலை மாற்றம் சுற்றுப்புறத்திற்கும், மக்களுக்கும் நல்லதாக அமைந்தால் சரி.
செய்தி மற்றும் புகைப்பட உதவி ம.செந்தில்குமார்