காலநிலை வெகுவாக மாறிய டெல்டா

பூமி வெப்பமயமாதலால் காலநிலையில் வெகுவாக மாற்றம் ஏற்ப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம், நிலையில்லாத கணிக்க முடியாத காலநிலை தான் கடந்த பல வருடங்களாக இருந்து வருவதை நாம் காண்கின்றோம்.

தொழிற்சாலை கழிவுகள் அது வெளியிடும் கார்பன் அளவு போன்ற காரணங்கள், நீர்நிலைகள் மாசுபடுவதும், காற்று மாசுபடுவது மட்டுமன்றி, ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகிவருகின்றன, இதனால் கடல் மட்டம் உயர்வதும் மற்றும் பூமியில் பெரிய காலநிலை மாற்றம் உலகெங்கும் உண்டாகியுள்ளது.

உலகின் சிலப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு வழக்கத்திற்கு மாறாக வெளியே தலை கூட காட்ட முடியாமலும், மற்றும் சில பகுதிகளில் மழையால் ஊரே மிதப்பதையும் பார்க்க முடிகிறது, இவையாவும் மனிதர்கள், இந்த காற்று மற்றும் நீரை மாசு படுத்துவதாலே என்பதை இந்த கொரோனா காலத்தில் இருந்த ஊரடங்கு சாமானிய மனிதர்களுக்கும் தெளிவாக விளக்கியது.

கடந்த இரண்டு முன்று ஆண்டுகளாக தஞ்சை டெல்டாப் பகுதிகளில் மழையும் சரி, காவிரி நீரும் பெரிய தடங்கள் இல்லாமல் வருவதால் பெரிய மாற்றம் உள்ளதை பார்க்கின்றோம்.

இன்று அதிராம்பட்டிணம்-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரைச்சாலை பகல் மணி 11க்கு மேல் ஆகியும் சூரியனை மேகங்கள் மறைத்து விடியும் காலைப் பொழுது போல தோன்றியது, அது பார்ப்பதற்கு அழகாவும் இருந்தது, எதுவானலும் பூமிக்கும், காலச் சூழ்நிலைக்கும், மக்களுக்கும் நல்லதாக அமைந்தால் சரிதான்.

செய்தி மற்றும் புகைப்படம் : ம.செந்தில்குமார்.